​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"விண்டோ" ஏசியில் வாயுக்கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறி விபத்து.. தந்தை, தாய், மகன், மகள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Published : Apr 08, 2022 7:28 PM



"விண்டோ" ஏசியில் வாயுக்கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறி விபத்து.. தந்தை, தாய், மகன், மகள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Apr 08, 2022 7:28 PM

கர்நாடகாவில் வீடு ஒன்றில் ஏசி இயந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் மூச்சுத்திணறி தாய், தந்தை, பிள்ளைகள் என 4 பேர் உயிரிழந்தனர்.

விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை தாலுகா மாரியம்மனஹள்ளியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் பலத்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் கூச்சலிட்டுக்கொண்டே வெளியே வந்த நிலையில், அவர்களது வீட்டில் வசித்து வந்த வெங்கட் பிரஷாந்த், சந்திரகலா தம்பதி மற்றும் அவர்களது 16 வயது மகன், 8 வயது மகள் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் 4 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டில் பொருத்தப்பட்டிருந்த விண்டோ ஏசி இயந்திரத்தில் , இயந்திரம் வெடித்து தீப்பிடித்ததில் மூச்சுத்திணறி அவர்கள் இறந்திருப்பதாக தீயணைப்புத்துறையினர் கூறும் நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.